மன்னார் பொது வைத்தியசாலையின் குடிநீர் பிரச்சனையை தீர்த்த றோட்டறிக் கழகம்

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று மற்றும் தாய்மார்கள் விடுதிக்கருகில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து காணப்பட்டு இருந்தமையால் இவ் விடுதியில் இருந்தவர்கள் அவசர தேவைகளுக்காக குடிநிர் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

இவ்வியந்திரம் பழுதடைந்திருந்த சமயம் இவற்றை திருத்தி அமைத்து நோயாளிகளின் பாவனைக்கு விடுவதற்கு நிதியின்மையால் பொது வைத்தியசாலை நிர்வாகம் நிதியின் எதிர்பார்ப்பிற்காகக் காத்திருந்தது.

இந்த நிலையிலேயே இதை அறிந்த மன்னார் றோட்டறிக் கழகம் இவ்வியந்திரத்தை திருத்துவதற்கான நிதியாக ரூபா 31,200 காசோலையை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளது. இவ்வைபவம் செவ்வாய் கிழமை (23.08.2022) மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதற்கான நிதியுதவிகள் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் கந்தையா அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னார் பொது வைத்தியசாலையின் குடிநீர் பிரச்சனையை தீர்த்த றோட்டறிக் கழகம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)