மன்னார் எம் பி எல் உதைபந்தாட்டப்ப போட்டியில் முதலாம் இடத்தை பெற்றது மார்ட்டீஸ் அணி

கடந்த 2020 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மன்னார் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பெறாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்ற இறுதி சுற்றுப்போட்டியில் மார்ட்டீஸ் அணி இறுதிப் போட்டியில் கேடயத்தையும் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.

மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட லீக் போட்டி மன்னார் பிரிமியர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது மன்னார் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நானாட்டான் பிரதேச சபை பொது மைதானத்தில் சனிக்கிழமை (20.08.2022) மாலை இடம்பெற்றது.

இப் போட்டியில் விருந்தினர்களாக வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய சிரேஸ்ர உப தலைவரும் முன்னாள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவருமான ரஞ்சித் ரொட்றிகோ, அருட் சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் , முன்னாள் இலங்கை உதை பந்தாட்ட சம்மேளன தலைவர் அனு ர டி சில்வா மற்றும் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஞானபிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் இணைந்து வெற்றி கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தனர்.

இறுதிப் போட்டியில் மன்னார் மார்டீஸ் அணியும் ஐலெண்ட எவ்.சி. அணியும் மோதிக் கொண்டது.

மிகவும் விறு விறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் வீதம் பெற்றிருந்தமையால் தண்ட உதை மூலமாக வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது

தண்ட உதையில் அதிக கோல்களை பெற்று மார்டீஸ் அணி வெற்றி பெற்று 10, 00000 ரூபா பணப் பரிசு மற்றும் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது.

குறித்த சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ஐலென்ட் எவ்.சி. அணிக்கு ஐந்து லட்சம் ரூபாவும், மூன்றாம் இடத்தை பள்ளிமுனை எவ்.சி. அணிக்கும் மூன்று இலட்சம் ரூபாவும், பதங்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது

அத்துடன் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருடம் தேசிய அணிக்கு தெரிவாகிய வீரர் மற்றும் மன்னார் உதைபந்தாட்ட ஜாமப்வான் அருட் சகோதர் ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்த போட்டிக்கான பிரதான பரிசுக்கான அனுசரணையை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் மரியாம்பிள்ளை எடிசன் அவர்கள் வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் எம் பி எல் உதைபந்தாட்டப்ப போட்டியில் முதலாம் இடத்தை பெற்றது மார்ட்டீஸ் அணி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)