
posted 9th August 2022
பொலிஸார் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடந்த 30 ஆம் திகதி நடந்து கொண்ட விதம் தொடர்பில் வடமாகாண இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மண்டபத்தில் ஊடக சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டது.
அரச சேவையினையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந்தனையும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை அவதிக்கு உள்ளாகி இருந்தது என்றும் இதனை எதிர்த்தே நேற்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)