பேசாலை புனித வெற்றி நாயகி பங்கில் ஒன்பதாவது அருட்சகோதரி பிறேமி குலாஸூக்கு மாபெரும் வரவேற்பு

மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த பங்காக திகழும் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கில் ஒன்பதாவது அருட்சகோதரியாக நல்லாயன் சபையில் இணைந்து தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணம் அதாவது நித்திய வாக்குத்தத்தம் செய்து கொண்ட பேசாலையைச் சேர்ந்த திரு திருமதி தார்சீஸ் குலாஸ் தம்பதினரின் புத்திரி அருட்சகோதரி பிறேமி குலாஸ் அவர்களை பேசாலை சமூகம் புதன்கிழமை (03.08.2022) மாலை மாபெரும் வரவேற்பு நிகழ்வை மேற்கொண்டதுடன்,

இவ் அருட்சகோதரியை பேசாலையிலிருந்து இறைவன் தனது திராட்சை தோட்டத்தில் இறை பணிக்காகவும் சமூகப் பணிக்காகவும் அழைத்தமைக்காக கூட்டுத் திருப்பலியில் பேசாலை சமூகம் ஒன்றிணைந்து நன்றி திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்,

தற்பொழுது தேசிய பாடசாலையாக விளங்கும் மன் / பற்றிமா மகா வித்தியாலயத்தில் இவ் அருட்சகோதரி கல்வி கற்றபொழுது அவரின் சக மாணவர்களும் புனித வெற்றி நாயகி ஆலய பேரவையும் வாழத்துப்பாக்கள் பாடி பரிசில்கள வழங்கிய நிகழ்வையும் பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் உரையாற்றுவதையும் காண்கின்றீர்கள்.

பேசாலை புனித வெற்றி நாயகி பங்கில் ஒன்பதாவது அருட்சகோதரி பிறேமி குலாஸூக்கு மாபெரும் வரவேற்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY