
posted 8th August 2022
புளொட்டின் அமைப்பின் பதிவு அரசியல் பிரிவும் - பதிவு பெற்ற கட்சியுமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம் நேற்று இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி அந்தக் கட்சியின் தலைவராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் செயலாளராக நா. இரட்ணலிங்கமும், பொருளாளராக க. சிவநேசனும், ஊடகப் பிரிவின் தலைவராக பா. கஜதீபனும், சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகினர்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், சில தீர்மானங்களும் எட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)