
posted 16th August 2022
"சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து இலங்கை அரசால் நீக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கின்றோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"பயங்கரவாதப் பட்டியலில் எஞ்சியிருக்கும் ஏனையவர்கள் கூட பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததுடன் மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் அவர்கள் அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இப்பட்டியலில் பெயரிடப்பட்டிருக்க வேண்டியவர்கள் அல்லாத அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மறுமதிப்பீடு மற்றும் தடை நீக்கம் செய்யும் இந்தச் செயல்முறையை குறைந்தபட்சம் தொடருமாறு நாங்கள் அரசை வலியுறுத்துகின்றோம்" என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY