புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இரு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர்.

மாவட்டத்தின் முக்கிய வலயக் கல்வி அலுவலகங்களான கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக சுமார் எட்டரை வருடங்கள் சிறந்த சேவையாற்றி வந்த எம்.எஸ். சஹதுல் நஜீம் புதிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக எஸ்.எம்.எம். அமீரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களிருவரும் தத்தமது வலயக் கல்விப் பணிமனைகளில் கடந்த புதன் கிழமை (10) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

கடமைப் பொறுப்பேற்க வருகை தந்த புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அலுவலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களால் சிறப்புற வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)