பளை மத்திய கல்லூரியில் "சாரணியப்பயனம்" நூல் வெளியீடு

கிளி/பளை மத்திய கல்லூரியின் பரிசில் நாள் நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.க. உதயகுமாரன் தலைமையில் அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப்பணிப்பார் திரு. செ. உதயகுமார் கலந்து சிறப்பித்தார். அத்துடன் இந்நிகழ்வில் "சாரணியப்பயணம்" நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சிவனருள்ராஜா,வடமாகாண பிரதிக் கல்விப்பணிப்பார் திரு கந்ததாசன், கல்வியமைச்சின் தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.செ. சுந்தரலிங்கம், மாகாண மற்றும் மாவட்ட சாரணிய ஆணையார் , அதிகாரிகள், லண்டன் நடேஸ் மியூசிக் அக்கடமி திரு. திருமதி. நடேசபிள்ளை காந்தரூபன், மற்றும் ஏனைய பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததோடு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பாக அதிபர் கருத்து தெரிவிக்கும் போது;

பளை/மத்திய கல்லூரியானது தேசியபாடசாலை என்ற ரீதியில் புதுப் பொலிவுடன் கல்வித் துறையில் வீறுநடை போடுகிறது. எனினும் கொவிட் தொற்று மற்றும் நாட்டின் அசாதாரண நிலைகளினால் நீண்ட காலமாக பாடசாலையின் பல்வேறு இணைப்பாடவிதான நிகழ்வுகள் பிற்போடப்பட்டிருந்த நிலையில், இந் நிகழ்வில் ஒரே தடவையில் மூன்று நிகழ்வுகளை நடத்தியமையை இட்டு பெரு மகிழ்சியடைகிறேன். அத்துடன் எமது பாடசாலை தேசிய பாடசாலை என்ற ரீதியில் ஒவ்வொரு நிகழ்வுகளும் திறம்பட நடாத்தி முடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அந்தவகையில் நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்த பிரதம விருந்தினர் உட்பட ஏனைய விருந்தினர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பளை மத்திய கல்லூரியில் *"சாரணியப்பயனம்"* நூல் வெளியீடு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)