
posted 30th August 2022
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு: சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு: கைதை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:
https://we.tl/b-csw8hSr3JD
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு: சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு: கைதை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:
ராமேஸ்வரம் ஆக 28,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள் (29) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் 27 மாலை ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நிஷாந்த் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் அழைத்து சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கை யை கண்டித்து உடனடியாக மீனவர்கள் படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 29 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்தனர்.
மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனிடையே இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். தினசரி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மீன்பிடித்தொழில் நடைபெறாததால் நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பேட்டி
ஜேசுராஜா - ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர்.
தீ விபத்தில் கனடா நாட்டவரின் உடமைகள் எரிந்தன
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் கனடா நாட்டில் இருந்துவந்து அங்கு தங்கியிருந்தவர்களின் அனைத்து உடைமைகளும் அழிவடைந்தன.
ஹோட்டல் அறையின் குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது
தொடரும் 100 நாடகள் போராட்டம்
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் 100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
“வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 28ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள், பெண்கள், சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், விவசாய மற்றும் மீனவர் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இளைஞன் மீது வாள் வெட்டு - தப்பி ஓடியது வன்முறைக் கும்பல்
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமைஉடுவில் பிரதேச செயலகத்துககு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில், இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த இளைஞன் காயமடைந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹெரோயின் விற்பனையாளர் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்கிறார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக் கிழமை (28) கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து அதே இடத்தைச் சேர்ந்த 27 வயது நபரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெறப்பட்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின்கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பன்னாட்டுக் குற்றங்கள் நூல் வெளியீடு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ. நா. ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய "பன்னாட்டுக் குற்றங்கள்" நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் செ.விந்தன் புத்தகத்தை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை நாகமணி இராமநாதன் பெற்றுக்கொண்டார்.
புத்தகத்துக்கான மதிப்பாய்வை யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல்த் துறைத் தலைவரும் பேராசிரியருமான கே.ரி.கணேசலிங்கம் நடத்தினார்.
கணவன் - மனைவி தகராறில் பலியான ஆவின் கன்று
கணவன், மனைவியின் குடும்பத் தகராறால் மனைவியின் சகோதரனின் மூன்று மாத மாட்டுக் கன்று அடித்துக் கொல்லப்பட்டது.
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் சகோதரன் தலையிட்டுள்ளார். இதன்போது அவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியின் சகோதரனின் வீட்டுக்குள் நுழைந்து மூன்று மாதமேயான கன்றுக் குட்டியை கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY