நீங்கியது எரிவாயுதட்டுப்பாடு

நாட்டின் பலபாகங்களிலும் சமையல் எரிவாயுவுக்கு நிலவிவந்த பெரும்தட்டுப்பாடு தற்சமயம் நிவர்த்திக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதகாலமாக எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

குறிப்பாக வெளிமாவட்ட பிரதேசங்களில் விறகு அடுப்பு பாவனை முன்னெடுக்கப்பட்ட போதிலும் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதிலும் தொடர்மாடிகளில் குடியிருப்போர் இந்த எரிவாயு தட்டுப்பாட்டால் பெரும் சிரமங்களையும், அசௌகரியங்களையும் அனுபவித்துவந்தனர்.

நாட்டின் பல பாகங்களிலும் அன்றாடம் தொழில் செய்து வந்த உணவுச் சாலைகள், சிற்றுண்டிச்சாலைகள் பல எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டு, பலர் தொழில் வருமானமிழந்து பெரும் துயருக்குள்ளாகினர்.

எனினும் தற்சமயம் நாட்டின் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர்கள் கிரமமாக விநியோகிக்கப்பட்டுவருவதால் தட்டுப்பாடு நிவர்த்திக்கப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாட்டை கட்டம் கட்டமாக முடிவிற்கு கொண்டுவருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதிதபீரிஸ், எரிவாயுவின் விலையும் சில தினங்களில் குறைக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

நீங்கியது எரிவாயுதட்டுப்பாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY