நாவலப்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹக்கீம் விஜயம்

இலங்கையில்,மத்திய மலைநாட்டில்,நாவலப்பிட்டியில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அதே மாவட்டத்தின் சகபாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வேலு குமார் ஆகியோர் பொது மக்களுடனும், முக்கியஸ்தர்களுடனும் அதுபற்றிக் கலந்துரையாடினர். அவர்கள் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கும் சென்று நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் உரிய கவனம் செலுத்தினர்.

இதேவேளை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் அனர்த்த நிவாரனக் குழு நாவலப்பிட்டி கம்பளை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது. இதன்போது உணவு உடை மருந்துப் பொருட்களை குடிநீர் உட்பட பாடசாலை மாணவர்களின் பாட உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நாவலப்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹக்கீம் விஜயம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)