நல்லூர் பெருந்திருவிழாவில் வாகனப் பாதுகாப்பு

நல்லூர் பெருந்திருவிழாவை ஒட்டி அமைக்கப்பட்ட வாகனப் பாதுகாப்பு வாகன நிலையத்தில் அதிக கட்டணம் அறவிடப்பட்ட நிலையத்தை மாநகர சபை பூட்டி பாரமெடுத்துள்ளது.

பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்ட வாகனப் பாதுகாப்பு நிலையமே இவ்வாறு பொறுப்பெடுக்கப்பட்டது.

நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் அந்த சுற்றாடலில் வாகன பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்படுவது வழமை. யாழ். மாநகர சபையின் அனுமதியுடனேயே இவை அமைக்கப்படுகின்றன. இந்த வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் சைக்கிளுக்கு 20 ரூபாயும், மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாயும், ஓட்டோ, கார் என்பவற்றுக்கு 50 ரூபாயும், வானுக்கு 100 ரூபாயும் மாநகர சபையால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்த வாகனப் பாதுகாப்பு நிலையமே நேற்று அதிகாரிகளால் மூடப்பட்டது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அதிகமான கட்டணங்களை அறவிடுதல், மாநகர சபையின் அங்கீகாரம் பெறாத சிட்டைகளை வழங்குதல் ஆகியவை கண்டறியப்பட்டால் உரிய வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் உடன் மூடப்படும் என்றும் யாழ். மாநகர சபையினர் எச்சரித்துள்ளனர்.

நல்லூர் பெருந்திருவிழாவில் வாகனப் பாதுகாப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY