
posted 23rd August 2022

தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பன்னிரண்டு நாள்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 08 ஆம் திகதி, வியாழக் கிழமை ஆவணித் திருவோண தினத்தன்று காலை 8.30 மணிக்கு “துர்க்கா புஷ்கரணி” தீர்த்தத் தடாகத்தில் இடம் பெறவுள்ள தீர்த்தோற்சவம் மற்றும் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.
தினமும் முற்பகல் 9.30 மணிக்கும், பிற்பகல் 5.30 மணிக்கும் வசந்த மண்டப பூசை இடம்பெற்று அம்பாள் திருவீதி உலா இடம்பெறும்.
மஹோற்சவ காலத்தில் அம்பிகை அடியவர்கள் ஆசார சீலர்களாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருகைதந்து வழிபாடியற்றி அம்பிகையின் அஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாக சபை கேட்டுக் கொண்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)