
posted 19th August 2022
இப்பெருநூலை எழுதிய திருவள்ளுவர் உலகம் இதைப்படித்து, அறிந்து, அதன்படி வாழ்ந்து உய்யட்டுமென்று அவர் ஞானத்திலுதித்த உலகத்திலே தலைசிறந்த ஒரு நூல்.
திருக்குறளின் இரண்டு வரிகளிலிருந்து வரும் ஞானம் இமயமலையில் தவமிருந்தாலும் வராது.
பல விதமான தலையங்களின் கீழ் துல்லியமாக வாழ்க்கையையே விபரித்து விளக்கும் வளமிக்க அருமையான நூல்.
இல்வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் - அப்போது தான் அது அழகாக இருக்குமென்று கூறுவதும், அவ்றான அழகுள்ள வாழ்வை வேறெங்கும் பெறமுடியாது என்று கூறுவதின் பொருளைப் பாருங்களேன்.
“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன்”
அன்புதான் இல்வாழ்வுக்குச் சிறந்தது. அன்பில்லையென்றால் இல்வாழ்க்கை எவ்வாறு இருக்குமென பாலை நிலத்தில் ஊண்டப்பட்ட தாவரத்தினை ஒப்பிட்டு அழகாக் கூறுவதனை அவதானிப்போம் இக்குறளில்.
”அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று”
மேலும், ஒருவன் தன் வாழ்க்கையிலுள்ள நல்ல அவன் குணங்களோடு மாறாதிருந்தால் மலைகூட அவனின் கீழ்தான் என்று கூறும் அழகை இந்தக் குறள் கூறுகின்றது.
”நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”
ஒருவனுடைய ஒழுக்கமே அவனை எவர் மத்தியிலும் உயர்த்திக் காட்டுமென்றும், ஒழுக்கமில்லையேல் அவன் பிறப்பிற்கே பங்கமாகிவிடும் என்று நல்லொழுக்கதோடு வாழ அறிவரை கூறுவதுமட்டுமல்லால் நம்நிலைமை எவ்வாறமையுமெனவும் எச்சரிக்கின்றார் குறள் ஆசிரியர் இக்குறளின் மூலம்.
”ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”
இவ்வாறு வாழ்க்கையின் நுணுக்கத்தையும், சிறப்பான அன்புள்ள அறம் நிறைந்த வாழ்வின் வளத்தையும் எடுத்தியம்புவதை அறியாமல் விட்டோமென்றால் அது நாம் இவ்வுலக வாழ்வில் முக்கிய பாகத்தை தவற விட்டுவிட்டோம் என்றாகிவிடும்.
எனவே, திருக்குறளை மறக்காது ஒவ்வொன்றாகக் கற்போம், பயன்பெற்று நல்வாழ்வை வென்றெடுப்போம்.
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY