திடீரென்ற மண்ணெண்ணை விலையேற்றம் தாக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்

இலங்கையில் மண்ணெண்ணை விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொது மக்கள் பெரும் விசனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

மண்ணெண்ணைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் இக்காலகட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரதும், கடற்றொழிலாளர்களதும் அன்றாட தேவையாக இருந்துவரும் மண்ணெண்ணை விலையேற்றம் இந்த மக்களுக்குத் தாங்கொணா வாழ்க்கைச் செலவுச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் ஆயிரம் ரூபாவும், அதற்குக் குறைவாகவும் சம்பளம் பெறும் நிலையில் இந்த மண்ணெண்ணை விலை உயர்வு பெரும் பாதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 87 ரூபாவாக இருந்துவந்த போதிலும் திடீரென 253 ரூபாவால் அதிகரிப்புச் செய்து புதிய விலையாக ஒரு லீற்றர் 340 ரூபாவென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதுடன் இதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்பாவி ஏழை மக்கள் தினமும் வீடுகளில் மண்ணெண்ணை விளக்குகளையும், சமையல் அடுப்புக்களையும் உபயோகித்து வருவதுடன், கடல் மீன்பிடியாளர்களுக்கும் மண்ணெண்ணையே அவசியமாகவுள்ளது.

அத்தகைய நிலையில் வானளாவ உயர்ந்துள்ள விலைஉயர்வு நாட்டில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏழைகள் வாழ்வில் எதிர்பாராத தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திடீர் விலையேற்றத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பரபரப்பையடுத்து, மண்ணெண்ணை விலை அதிகரிப்பினால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த தகவலொன்றும் தற்சமயம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

திடீரென்ற மண்ணெண்ணை விலையேற்றம் தாக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY