தடம்புரண்ட மணல் கடத்தல் வாகனம் -  இளைஞன் மரணம்

மணல் கடத்தி வந்த வாகனம் புரண்டதில் அதில் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை புலோலி - கொடிகாமம் வீதியில் உள்ள முள்ளிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் துன்னாலை குடவத்தையைச் சேர்ந்த ஜெ. ஜெயந்தன் (வயது- 27) என்ற இளைஞனே பலியாகியவராவார்.

மணல் கடத்தி வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயங்களுக்கு உள்ளான இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தடம்புரண்ட மணல் கடத்தல் வாகனம் -  இளைஞன் மரணம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY