ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம்

முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி ஆழமாக எங்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது முஸ்லிம்கள் சார்பில் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் சம்மாந்துறை, மூதூர் போன்ற உள்ளுராட்சி மன்றங்கள் உட்பட ஏனைய சில உள்ளுராட்சி மன்றங்களில் நிலவும் நிர்வாக முரண்பாடுகளை தீர்த்தல், பிரதேச செயலகங்களில் உள்ள நிர்வாக முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல், விவசாயம், மீன்பிடி நடவடிகைகளுக்கு எரிபொருளை தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்தல், முஸ்லிம்களின் பல பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினோம் என்றார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம் எம்.எஸ். தௌபீக், கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY