சேவை நலன் பாராட்டு விழாவும் 'பத்தியின் பாதையில்' புத்தக வெளியீடும்

மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பாலைக்குழி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா மன்னாரில் நிதி அமைச்சு பொதுத் திறைசேரி மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.யு. சந்திரகுமாரன் தலைமையில் சனிக்கிழமை (13.08.2022) வெகு விமரிசையாக நடைபெற்றது.

திரு அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் அவர்கள் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும் யாழ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து பின் இலங்கை நிர்வாக சேவையில் நானாட்டானில் உதவி அரசாங்க அதிபராகவும், விசேட ஆணையாளராகவும் , மன்னார் மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், மொனராகலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபராகவும் இதைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இவர் ஓய்வு பெற்றுள்ளார்.

இதை முன்னிட்டு மணிவிழா கண்ட கதாநாயகன் திரு. அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழாவுடன் ஆயர் .மதத் தலைவர்கள், அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், ஊடகவியலாளர் , நண்பர்கள் வட்டம், சட்டத்தரணி, முன்னாள் அரசாங்க அதிபர்கள், எந்திரி , வைத்திய கலாநிதி போன்ற 44 பேர் இவரை பாராட்டி எழுதிய வாழ்த்துச் செய்திகளும் கட்டுரைகளும் அடங்கிய 'பத்தியின் பாதையில்' என்ற புத்தக வெளியீடும் இடம்பெற்றது.

அத்துடன் பல திணைக்களங்கள் கிராம அமைப்புக்கள் இந் நிகழ்வின்போது இவருக்கு பொன்னாடை போர்த்தியும் வாழத்துப்பாபாடியும், சின்னங்களும், பரிசில்களும் வழங்கிய நிகழ்வும் பல முக்கியஸ்தர்கள் உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சேவை நலன் பாராட்டு விழாவும் 'பத்தியின் பாதையில்' புத்தக வெளியீடும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY