
posted 9th August 2022
சர்வ கட்சி ஆட்சி முறை நடைமுறையில் இருந்தால் சிறுபான்மையினரின் கருத்துக்கள் வலுவடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப்-ப.ம இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு எதிர்நோக்கிய மக்கள் எதிர்நோக்குகின்ற விடயங்கள் முன்னேற்றகரமாக கையாள ஆரம்பித்துள்ளதால் மெதுமெதுவாக நல்ல சமிஞ்ஞைகளை காணக் கூடியதாக உள்ளது. இது எந்தளவிற்கு பொருளாதாரப் பிரச்சினைகளையும், அரசு எதிர்நோக்கிய ஏனைய விடயங்களையும், மக்கள் பாதிக்கப்படுகின்ற விடயங்களையும் எந்தளவிற்கு தீர்த்து வைக்கும் என்னும் கேள்வி மக்கள்மத்தியில் எழத் தொடங்கி உள்ளன. மக்களால் வெகுஜன ரீதியாக வன்முறையற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்ற ஜனநாயகப் போராட்டத்தை பல சட்டங்களை உருவாக்கியும் அரச பயங்கர வாதத்தைக் கொண்டும் அடக்க முயற்சித்து அரசு எதிர்நோக்குகின்ற ஏனைய மக்கள் பாதிக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு முன்னேற்றகரமாக அரசு செயற்படுகின்ற நிலையில் சர்வகட்சி ஆட்சிமுறை ஊடாக வேலைகளைச் செய்வதற்கு அரசியல்கட்சிகள் ஒத்துழைக்குமா?
எமது நாட்டைப் பொறுத்தவரையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியற்கட்சிகள் எந்தளவிற்கு ஒத்துழைக்கும். ஏனெனில்கட்சிகளுக்குள் எழுந்துள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள், ஊழல் மோசடி, தனிநபர்முரண்பாடு, வெளிநாட்டு கொள்கைகள், கடந்த கால கசப்பான அனுபவங்கள் அத்தனையும் மறந்து சர்வ கட்சி ஆட்சி நிலை நிறுத்தப்படுமா? கேள்விக்குறியாக சர்வகட்சி ஆட்சி முறைமாறும் அப்படி சர்வ கட்சிப் பிரதிநிதிகள் பங்களிப்புச் செய்வதற்கு தூரத்தில் இருந்துகொண்டு சம்பிரதாய ஒத்துழைப்பை மட்டும் வழங்குவார்கள்.
தற்சமயம் நடந்து முடிந்த பிரச்சினைகளுக்கும், இனப் பிரச்சினைக்கும் சம்பந்தம் உண்டா? இனிமேலாவது இனப் பிரச்சினைக்கான கலந்துரையாடல் மேற் கொள்ளப்படுமா? வடகிழக்கு மக்கள் தற்சமயம் உள்ள சூழ்நிலையில் தங்களது உரிமைகளையும், தேவைகளையும் மக்கள் பிரதிநிதிகள் பூர்த்தி செய்ய விரும்புகின்றனர். இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்கு சமனாக அபிவிருத்தி மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் தனிநபர் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென மக்கள் உள்ள நிலையில் 22பாராளுமன்ற மக்கள்பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் அரைக்கு அரைவாசி வாக்குகள்பிரிந்து அபிவிருத்திக்கும். தமிழ்த் தேசியத்திற்கும் பிரதிநிதிகள் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே மக்கள் பிரதிநிதிகள் தேசியத்தையும், மக்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு வாக்குகள் பல வகையாக பிரிவதற்கு தற்சமயம் அடித்தளம் போடப்படுகின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY