
posted 28th August 2022
மன்னார் பெருநிலப் பரப்பில் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஒர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைகள், இதனால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை எடுத்துக் கூறும் வகையில் ஸ்ரீலேகா பேரின்பகுமாரின் 'கோவர்த்தனம்' நாவல் வெளியீடு நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் 'கோவர்த்தனம்' நாவல் நானாட்டான் சிவராசா இந்து வித்தியாலயத்தில் ஞாயிறு (28.08.2022) மாலை மூன்று மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர் எஸ்.இ. றெஜினோல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்;
முதன்மை விருந்தினர்களாக அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார், நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்த குமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக நானாட்டான் கோட்டக் கல்வி பணிப்பாளர் ரி. ஜெகநாதன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சிவராசா இந்து வித்தியாலய அதிபர் அமலதாஸன் எஸ். ஆசைப்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
நுலாசிரியர் ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் நீண்ட காலம் மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தவர்
மன்னார் பெருநிலப் பரப்புப் பிரதேசங்களில் விவசாயத்திற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப்படுவதுண்டு. அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஒர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பதில் இருந்து வரும் பிரச்சனைகள் இதனால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் எட்டாவது இலக்கியப் படைப்பு 'கோவர்த்தனம்' என்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)