
posted 30th August 2022
இந்தியா ஊடாக இலங்கைக்குள் கடத்தப்பட்ட கஞ்சா கைபற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட கஞ்சா ஏற்றிய ஹைஏஸ் வாகனத்தை தொண்டமனாறு வளலாய்ப் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியதுடன் இரண்டு சந்தேக நபர்களைம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 31 மற்றும் 32 வயதுடைய மன்னார் மற்றும் வளலாய் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
51 கிலோ 500 கிலோ கிராம் கஞ்சா இதன்போது ஹைஏஸ் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எச். பிரபாத் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 50 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)