
posted 9th August 2022
கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியானது அபியகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்றது. 300க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்ட குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த போட்டியில் பங்குபற்றியவர்களில், ஆண் குழுவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ். கீரன் முதல் இடத்தினை பெற்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே. ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ். கிந்துசன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.
பெண்கள் குழுவில், வவுனியாவை சேர்ந்த எஸ். கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண்டார். முல்லைத்தீவை சேர்ந்த என். கேமா இரண்டாம் இடத்தையும், எல். மேரிவினுசா மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.
முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களிற்கு மறையே 1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் ரூபா காசோலையும் ஏற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேவேளை, போட்டியில் பங்கு பெற்றோருக்கான சான்றிதழ்களும், ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)