
posted 1st August 2022
கிளிநொச்சி மாவட்ட காற்பந்து லீக்கின் நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்ய இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களின் தலைமையில் குழு ஒன்று கிளிநொச்சி வருகை தந்தனர்.
குறித்த குழு நேற்று பி.ப 2 மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்து கிளிநொச்சி லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களை சந்தித்தனர்.
இடைக்கால நிர்வாகம் ஒன்றினை அமைத்து உடனடியாக யாப்பு ஒன்றினைத் தயாரித்து காற்பந்து சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்குமாறும், அதன் பின்னரே நிரந்தர நிர்வாகம் அமைக்கப்படும் எனவும் தங்கள் அனுமதி இன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் காற்பந்து லீக் தொடர்பான கூட்டங்கள் வைக்க அனுமதி இல்லை என்பதுடன் அவ்வாறான கூட்டங்களுக்கு செல்லும் கழகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்கள் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)