
posted 20th August 2022
கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி படையினரிடமிருந்து விடுவித்து கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தவானந்தா உறுதியளித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பாடசாலை கல்விசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்புாது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைானத்திற்கு செல்லும் வீதியானது, இராணுவ முகாமிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், மாணவர்கள் ஏ9வீதி ஊடாக சென்று விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டிய நிலை காணப்படுவது தொடர்பிலும், அது பாதுகாப்பற்றது என்ற விடயம் தொடர்பிலும் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் அமைச்சரிடம் முன்வைத்தார்.
குறித்த விடயம் இலகுவானது எனவும், அதனை மாணவர் பாவனைக்காக விடுவிப்பதற்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் விளக்கமாக எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 2000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், விளையாட்டு மைதானம் கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு பின்பகுதியில் அமைந்துள்ளது. அதற்கான வீதியை உள்ளடக்கி நகரில் உள்ள இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமையால், மாணவர்கள் நீண்ட தூரம் சுற்றி மைதானத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த புாதிலும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலயைில் பாடசாலைமுதல்வரினால் மன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சர் சாதகமான பதில் வழங்கியுள்ளமையானது பாடசாலை சமூகத்தினர் மற்றும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY