கால்நடைகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளின்மையால் இருவர் கைது

அனுமதிப் பத்திரத்துக்கு முரணான வகையில் கால்நடை ஏற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் நேற்றைய தினம் (25) இரவு ஆறு (06) கால்நடைகளை லொறி ஒன்றில் ஏற்றி சென்ற வாகனமும், சாரதி மற்றும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் தம்பதெனியா பகுதிக்கு குறித்த கால்நடைகளை கொண்டு செல்ல முற்பட்ட வேளையே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இருந்தபோதிலும், இரவு வேளைகளில் கால்நடை கொண்டு செல்ல முடியாத காரணத்தினாலும், சுகாதார பரிசோதகரின் மருத்துவச் சான்றிதழ் இல்லாமை மற்றும் கால்நடை கொண்டு செல்லக்கூடிய வசதிகள் வாகனத்தில் இல்லாமையினாலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இருவரும் இன்றைய தினம் (26.08.2022) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளின்மையால் இருவர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY