
posted 1st September 2022
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுடன் 2018 நாட்களைத் தாண்டி தமது போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்.
அத்துடன் ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஐ.நாவினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமாக பிரகடனப் படுத்தியதையடுத்து ஆண்டு தோறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னேடுக்கின்றமை குறிப்பிடதக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)