களவுகளில் தொடர்பான இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்கள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி. கொஸ்தாவின் வழிகாட்டலில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என் எஸ்.டி.சத்திரசிங்கவின் தலைமையில் விசேடதேடுதல் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமைமாலை வட்டுக்கோட்டை பொலிஸார் வட்டு தெற்குஇன்பச்சோலை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் வட்டுக்கோட்டை பொலிஸார் 8 சைக்கிள்கள் மற்றும் 8 மின்மோட்டார் இயந்திரங்களை கைப்பற்றினர்.

சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகவும் மேலும் திருட்டுக்களில் சந்தேக நபர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

களவுகளில் தொடர்பான இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

களவுகளில் தொடர்பான இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
களவுகளில் தொடர்பான இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
களவுகளில் தொடர்பான இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
களவுகளில் தொடர்பான இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More