கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைகள்தான் என்ன? ஆராயச் சென்ற அமைச்சர்

யாழ். மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று மாலை யாழ்ப்பாணம் கல்வியல் கல்லூரியில் யாழ். மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது யாழ். மாவட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை தொடர்பில் அவர் கேட்டு அறிந்து கொண்டார்.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் யாழ். மாவட்டத்தில் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை என்பவற்றை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் தூரப்பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைக்கு செல்லும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு உடனடியான தீர்வினை மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு, வடமகாணக் கல்விப் பணிப்பாளர்களின் அசமந்தப் போக்கு , இடமாற்ற கொள்கையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்தல், தற்பொழுது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்னை போன்றவை தொடர்பில் இதன் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது .

அத்துடன் கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கும் அமைச்சர் இதன்போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டதுடன், கடல் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கருத்துக்களை முன்வைத்தனர்.

கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைகள்தான் என்ன? ஆராயச் சென்ற அமைச்சர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY