கடலரிப்பைத் தடுக்க உதவுங்கள். கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த நிந்தவூர்ப் பிரதேசத்தில் உக்கிரமடைந்துவரும் கடலரிப்பைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு கோரியும், இதுவரை கடலரிப்பைத் தடுப்பதற்கு ஆவன செய்யப்படாமையைக் கண்டித்தும் பிரதேச கடற்றொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நிந்தவூர் பிர்தௌஸ் பள்ளிவாசலுக்கு முன்பாக, கடலரிப்பு உக்கிரமடைந்து மீனவர் கட்டிடமொன்று கடலால் காவுகொள்ளப்பட்டுள்ள பகுதியில் கடற்றொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்த்திலீடுபட்ட கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக தொடர்ந்துவரும் கடலரிப்பைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், ஜனாதிபதிக்கு இது விடயமாக அனுப்பவிருக்கும் அவசர மகஜர் ஒன்றிலும் திரண்டிருந்தவர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுத்தனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாணம் காரணமாக நிந்தவூர்ப் பிரதேசத்தில் தொடர்த் தேர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடலரிப்பு 1992 ஆம் ஆண்டு முதல் நிந்தவூர்ப் பிரதேசத்தில் பெரும் அனர்த்தமாக சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன் கடற்றொழிலாளர்களின் மீன்பிடித்தொழில் துறையை முற்றாகப் பாதித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்ட முக்கியஸ்த்தர்கள் கவலை வெளியிட்டனர்.

தற்சமயம் பெரும் வீரியத்துடன் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் கடற்கரையை அண்டியிருந்த மீனவர் கட்டிடங்கள் சில சேதமுற்று கடலால் காவுகொள்ளப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் நிந்தவூர்ப் பிரதேசத்திலேற்பட்டு வரும் கடலரிப்பு அனர்த்தம் காரணமாக சுமார் 500 ஏக்கருக்கு மேல் தென்னந் தோட்டங்களும், நெற் காணிகளும்கூட காவு கொள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நிந்தவூரைக் கடல் விழுங்குமா என்ற கேள்வி தோன்றுமளவுக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பைத் தடுப்பதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமும், அவசரமுமானது எனக் கோரப்படுகின்றது.

இந்த கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கடற்றொழில் அமைச்சு மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் என்பன இன்னும் தாமதியாது உடன் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

மக்கள் பிரதி நிதிகளான பிரதேச அரசியல் முக்கியஸ்த்தர்களும் இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தங்களை வழங்கி ஆவன செய்ய முன்வரமாட்டார்களா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

கடலரிப்பைத் தடுக்க உதவுங்கள். கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY