
posted 22nd August 2022
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரதேசமான நிந்தவூர்ப்பகுதியில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பைக் காண்பதற்குத் தினமும் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொதுமக்கள் திரண்ட வண்ணமுள்ளனர்.
குறிப்பாக மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிந்தவூர் 9 ஆம் பிரிவு பகுதியில், கடற்கரையை அண்டிய வீதி வரை கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதுடன், பொது மக்கள், கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் கடற்கரை வீதியே கடலால் காவு கொள்ளப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடலரிப்பு மோசமாகவுள்ள பிரதேசங்களில் தற்காலிகமாகக் கரையோகரப் பாதுகாப்பு திணைக்களம் கருங்கற்களையிட்டு தடையேற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் உக்கிர கடலரிப்பைத் தடுக்க முடியாத நிலைமையே தென்படுகின்றது.
இதுவரை கடலை அண்டியிருந்த மீனவர் கட்டிடங்கள், தென்னை மரங்கள் என அழிவுகள் ஏற்பட்டுவரும் நிலையில், கடற்றொழிலாளர்களின் மீன்பிடித் தோணிகள், இயந்திரப் படகுகளை வழமைபோல் நிறுத்தி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
நிந்தவூர்ப் பிரதேசத்தில் உக்கிர கடலரிப்பால் ஏற்பட்டுள்ள இந்த அனர்த்த நிலமை தொடர்பில் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பரபரப்பான தகவல்கள் பரிமாறப்படுவதால் உள்ளுர் பொது மக்கள் உட்பட வெளியூர் பொது மக்களும் தினமும் பெருமளவில் படையெடுத்து உக்கிரகடலரிப்பு அனர்த்தத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.
நிந்தவூரைக் கடல் விழுங்கும் அபாய நிலைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவது எப்போதோ? மக்களின் அங்கலாய்ப்பு இதுவாகவே இன்றுள்ளது!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY