
posted 28th August 2022
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரதேசமான நிந்தவூர்ப் பகுதியில் ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு தொடர்பிலான தடுப்பு நடவடிக்கைக்கென அவசர நிதியாக 20 மில்லியன் நிதி ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திகாமடுள்ள மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பைசால் காசிம், இக்கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியின் பயனாக முதற்கட்டமாக தடுப்பு நடவடிக்கைக்கென மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கடலரிப்பு தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிரந்தமான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளது.
நிந்தவூரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பின் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை நேரில் சந்தித்து விளக்கியதுடன் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் வலியுறுத்தினார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களம், துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சு, துறைமுக அதிகார சபை என்பவற்றின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கடலரிப்பு அனர்த்த நிலமைகளைத் தெளிவுபடுத்தி கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதன் பயனாகவே தடுப்பு நடவடிக்கைக்கென முதற்கட்டமாக ஜனாதிபதியால் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டு கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை, நிந்தவூர்ப்பிரதேச கடலரிப்பு அனர்த்தத்திற்கென நிரந்தர தடுப்பு வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கென சம்பந்தப்பட்ட உயர்மட்டக்குழு ஒன்று அடுத்தவாரம் நேரில் கள விஜயமொன்றை நிந்தவூருக்கு மேற்கொள்ளவிருப்பதாகவும், இக்குழு விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் மேற்கொண்டு தடுப்பு தொடர்பிலான நிரந்தர வேலைத் திட்டத்திற்குச் சிபார்வுகளை வழங்க விருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.
கரையோரப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களின் வரைபடங்களுட்பட ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்பித்துள்ளதாகவும், நிந்தவூரின் கரையோரப் பிரதேசங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமென செயலாளர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுகத்துடனிருக்கும் கற்பாறைகளை விடுவித்து நிந்தவூரின் கரையோரப் பிரதேசங்களில் இடுமாறு துறைமுக அதிகார சபைத் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY