
posted 15th August 2022
முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்த போது என்ன பேசப்பட்டது என்பது பற்றி ஜனாதிபதி தரப்பு எதுவும் சொல்லாத நிலையில் அவரை சந்தித்த முஸ்லிம் கட்சிகள் அவர் இதை ஏற்றுக்கொண்டார், அதை ஏற்றுக்கொண்டார் என தாமாக அறிக்கைகள் விடுவது சமூகத்தையும் நாட்டையும் ஏமாற்றும் செயல் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
வழமையாக முஸ்லிம் கட்சிகள் அரசுடன் பேசுகின்ற விடயங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. அரசுடன் பதவிகள் பற்றி பேசுவதும், சமூகம் சம்பந்தமாக பேசியதாக சமூகத்துக்கு பொய் சொல்வதும் வழமையான ஒன்று.
எம்.பீ.க்கள் உள்ள இந்தக் கட்சிகள் ஜனாதிபதியிடம் முன் வைத்த கோரிக்கைகள், அவற்றில் எற்றுக் கொள்ளப்பட்டவை எவை என்பதை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிடாத நிலையில் இக் கட்சிகளின் அறிக்கைகள் சமூகத்தை சமாளிக்கவும், ஏமாற்றவும் சொல்லும் விடயங்களாகவே தெரிகின்றன.
ஒரே நாடு ஒரே சட்ட அறிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவேன் என ஜனாதிபதி சொன்னதாக இக்கட்சிகள் தரப்பு கூறுகிறது. சம்மாந்துறை, மூதூர் சபைகள் உட்பட பல விடயங்கள் ஜனாதிபதியுடன் பேசப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு சொல்கிறதே தவிர ஜனாதிபதி தரப்பு இவை பற்றி எதையும் வெளியிடவில்லை. ஆக குறைந்தது இக்கட்சிகள் ஜனாதிபதியிடம் முன் வைத்த எழுத்து மூல கோரிக்கைகளின் பிரதிகள் கூட ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே, பதவிகளை மட்டும் முன் வைத்து முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேசி விட்டு, சும்மா முஸ்லிம்களை ஏமாற்ற அதை பேசினோம் இதைப் பேசினோம் என ஊடக அறிக்கை வெளியிடுகின்றனர் என்பதே ஐக்கிய காங்கிரஸின் கருத்தாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY