
posted 8th August 2022
இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கு நிலவிய பெரும் தட்டுப்பாடு நிவர்த்திக்கப்பட்டுவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக இனிப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்த விலைக்குறைப்பு செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் கடந்த 5 ஆம் திகதி குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளை திங்கட்கிழமையே (08) விலை குறைப்பு செய்யப்படுமென தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சமையல் எரிவாயுவின் (12.5) விலை 200 ரூபாவால் குறைக்கப்படுமென தகவல்கள் வெளியாகிவருகின்றன.
திங்கட்கிழமை (08) அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் பெறப்பட்டு விலை குறைப்புக்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை கடந்த 22 நாட்களில் 27 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் நாட்டில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனத்தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY