இலங்கை இராணுவத் தளபதியால் பயனாளியிடம் பருத்தித்துறையில் வீடு கையளிப்பு

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் விஸ். நடராஜாவின் நிதிப் பங்களிப்பில் இலங்கை இராணுவத்தின் 551வது படைப்பிரிவின் ஆளணி உதவியில் கட்டி முடிக்கப்பட்ட வீடு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் விகும் லியனகேயினால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வடமராட்சி வடக்கு புலோலி கிழக்கு பகுதியில் மதியம் 1:30 மணியளவில் இடம் பெற்றது.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவருக்கே இராணுவ தளபதியால் சம்பிரதாய பூர்வமாக வீடு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தண விஜயசுந்தர, 55 வது படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் குணரட்ண, 551வது படை பிரிவின் தளபதி பிரிகேடியர் சிந்திக்க விக்கிரமசிங்க, 552 பிரிகேடியர் ஜெயவீர, உட்பட இராணுவ அதிகாரிகளும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, பருத்தித்துறை நகர சபை தவிசாளர் யேசுராசா இருதயராசா, வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் க. சத்தியபாலன் , உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, மற்றும் படைத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், குறித்த கிராமத்தில் கற்பவதிகள் பத்துப் பேருக்கு உலர் உணவு பொதிகளும், பாடசாலை மாணவர்கள் மூவருக்கு மாதாந்த கொடுப்பனவாக ரூபா 5000 வழங்குவதற்கான காசோலைகளும் மற்றும் 10 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் புத்தகப் பை என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை இராணுவத் தளபதியால் பயனாளியிடம் பருத்தித்துறையில் வீடு கையளிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY