
posted 17th August 2022
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மண்ணெண்ணெய் பிரச்சனைக்கு இந்தவார இறுதியில் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கடல் உணவுகளை பெற முடியாதளவு பிரச்னை இருப்பது உண்மைதான். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் எமது மக்கள் அதிகளவான பிரச்னைகளை எதிர்கொள்கின்றார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் தாராளமாக கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கடற்றொழிலாளர்களை பொறுத்தவரையில், சிறு கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடாக இருக்கின்றது. கொழும்புடன் தொடர்பு கொண்டு தனியார் மண்ணெண்ணெயை இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளேன்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனமும் மசகு எண்ணையை வடித்து மண்ணெண்ணெயாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வார இறுதியில் இது கைகூடும் என்று நம்புகின்றேன் என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)