
posted 16th August 2022
கிழக்கு மாகாண அரச சேவையாளர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் போது மாகாண அரச சேவையில் உள்ள இணைந்த சேவை உத்தியோகத்தர்களை தத்தமது வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற வசதியளிக்கும் வகையில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ். லவகுமார், பொதுச் செயலாளர் ஏ. புஹாது ஜே.பி. ஆகியோர் கிழக்கு மாகாண பிரதமர் செயலாளர் மற்றும் பிரதீப் பிரதமர் செயலாளர் நிர்வாகம் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்;
மாகாண அரசு சேவையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப சேவையாளர்கள், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப உத்தியோகத்தர் மற்றும் சாரதிகள், அலுவலக பணியாளர்கள் முதலான இணைந்த சேவை உத்தியோகத்தர்களை 2023ம் ஆண்டுக்கான வருடம் அந்த இடமாற்ற திட்டத்தின் போது தத்தமது வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற இடமளிக்கப்படுவது அரச சேவையில் சிறந்த வினைத்திறனைப் பெற்றுக் கொள்ள வழிசெய்யும் என கருதுகின்றோம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருள்களுக்கான விலைவாசி உயர்வு, மற்றும் போக்குவரத்து சிரமம் என்பதை கருத்தில் கொண்டு அருகில் உள்ள வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள சேவை நிலையங்களுக்கு இடமாற்றம் வழங்க ஆவன செய்யுமாறு அக்கடிதத்தில் ஆலோசனையை முன்வைத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY