
posted 3rd August 2022
நாட்டில் நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிப்டைந்தமையால் அரச மற்றும் பிரயாணிகள் போக்குவரத்து செய்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் காரணத்தாலும் வெள்ளிக் கிழமைகளில் அரச ஊழியர்கள் தங்கள் இல்லங்களில் வீட்டுத் தோட்டங்களை கண்காணிக்கவும் என அந்நாள் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறையாக அரசு வழங்கியிருந்தது.
ஆனால், தற்பொழுது அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து நெருக்கடி நிலவி வந்திருந்தது.
இதை முன்னிட்டு வெள்ளிக் கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
எனினும்இ தற்போது பொதுப் போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதாகவும் போக்குவரத்திலிருந்து விலகியிருந்த 800 பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை மீள சேவையில் இணைத்துள்ள காரணத்தினாலும் அத்துடன் வெற்றிகரமான முறையில் கியூ.ஆர். முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுவதாலும், இந்த விடயங்களை கருத்திற்கொண்டு பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு பொதுநிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கும் என அமைச்சரவவை பேச்சாளர் மேலும் இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY