அம்பாறையில் கடல் மீன்பிடி ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடல் மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது.

கடந்த பலமாத காலமாக கடல் மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வருமானமின்றி வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய நிலையும் நீடித்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பலகரையோரப் பிரதேசங்களிலும் கரைவலைத் தோணிகளுக்கான கடல் மீன்பிடி ஆரம்மாகியுள்ளது.

தற்சமயம் குறிப்பாக நெத்தலி மற்றும் கீரி இனமீன்கள் பெருமளவில் பிடிபட்டு வருவதால் கடற்றொழிலாளர்களுக்கு தினசரி வருமானமும் கிடைத்து வருகின்றது.

இதேவேளை இந்த மாவட்டத்தில் மீனுக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளதுடன் மீனின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் வியாபாரிகளுக்கு மொத்தமாக மீன் விற்பனை இடம்பெறும் அதேவேளை, மேலதிக மீன்களை கருவாடாக உலர்த்தி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதிலும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை, ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரியஇன மீன்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்த நிலையிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் கடல் மீன்பிடி ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY