அதிகரிக்கும் கொரொனாத் தொற்றும் மரணமும்

இலங்கையில் கொரோனா தொற்றால் மேல் 6 பேர் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும், 3 பெண்களுமே தொற்றால் உயிரிழந்தனர்.

இதன்படி, இதுவரையில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 630ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது பெண்ணே நேற்று இரவு உயிரிழந்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்றாலேயே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டநாட்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்ததுடன், மரணமும் பதிவாகியுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரொனாத் தொற்றும் மரணமும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)