
posted 29th August 2022
படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு அடுத்த முதலாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் 8 பேரை பத்திரமாக மீட்ட மரைன் பொலிஸார் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாகசென்ற வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடியை அடுத்துள்ள முதலாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கைத் தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (27) காலை மரைன் பொலிஸார் விரைந்து சென்று அங்கு தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழர்களை பத்திரமாக மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள், தலைமன்னாரைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65 வயது மூதாட்டி இந்துமதி என மொத்தமாக 8 பேர் நேற்று முன் தினம் இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி முதலாம் மணல் திட்டில் வந்திறங்கியமை தெரியவந்தது.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம் எனத் தனுஷ்கோடி வந்ததாகவும், தங்களை அழைத்து வந்த படகு தனுஷ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்துக் கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைக் காட்டி அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் உதவி கோரிய நிலையில் மரைன் பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (28) வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY