
posted 2nd September 2022
மயிலிட்டி - பருத்தித்துறை வீதி வியாழன் (01.09.2022) இன்றிலிருந்து 24 மணித்தியாலமும் திறப்பு - ஆளுநர் தெரிவிப்பு.
யாழ் மயிலிட்டி பருத்தித்துறை வீதி இன்று (01.09.2022) வியாழக் கிழமையிலிருந்து 24 மணித்தியாலமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பருத்தித் துறை - மயிலிட்டி வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு 10 மணிக்கு மூடப்பட்டு அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு கட்டளை தளபதி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் குறித்த வீதியை 24 மணித்தியாலமும் திறந்து விடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)