
posted 3rd August 2022
வடக்கு-கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஊதிர வைரவர் ஆலயத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமைமுற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.
முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம்
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” எனும் தொனிப்பொருளில், வடக்கு - கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
நேற்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவர்
சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஏ- 9 வீதியின் ஓரத்தில் மக்கள் அமைதியான மறையில் அமர்ந்திருந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY