100 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் 10ஆவது நாள்

வடக்கு-கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் 10ஆவது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இந்தப் போராட்டம் நேற்று புதன் கிழமை (10) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது,

முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப்பொருளில், வடக்கு-கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

நேற்றைய போராட்டத்தில் கிராம அமைப்புக்கள், விவசாய, மீனவர் சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

100 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் 10ஆவது நாள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)