
posted 30th August 2022
நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலில் ஆவணி சதுர்த்தி திருவிழா 31.08.2022 புதன்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 6.15 மணிக்கு 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவில் தொடர்ந்து பஞ்சமுக அர்ச்சனை இடம்பெறும். பின்னர், மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று விஷேட சாத்துப்படி சாத்தப்பட்டு விநாயகப் பெருமான் பூந்தண்டிகையில் உள்வீதி, வெளிவீதி உலா வருவார்.
நண்பகல் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கும் மகேஸ்வர பூசையும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலய பெருந் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட சைவசமய அறிவுசார் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)