
posted 30th August 2022
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீண்ட கால வரலாற்றைக் கொண்ட முருங்கன் ஆதார வைத்தியசாலைக்குரிய காணி அனுமதிப் பத்திரம் வியாழக்கிழமை (25.08.2022) நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் அவர்களால் பிரதி மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி டெனி அவர்களிடம் நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது
அதே நேரம் பரிகாரிகண்டல் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான காணியும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)