வெள்ளத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகியோருக்கு அக்கரைப்பற்று மக்கள் உதவிக்கரம்

அண்மைகாலமாக மலையகப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக நாவலப்பிட்டி பகுதியிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அக்கரைப்பற்று ஜம்மியதுல் உலமா , சதாத் நிதியமும் மற்றும் 'இன்ஸ்பீரிங் யுத்ஸ்' ஆகியன இணைந்து அக்கரைப்பற்று மக்களின் அன்பளிப்பு என்ற தொனியில் பாதிப்டைந்த மக்களுக்கு பொருட்கள் வழங்கி வைத்துள்ளனர்.

நாவலப்பிட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள், உணவு பொதிகள் மற்றும் தலையணை என்பன நாவலப்பிட்டி நகர் ஜும் ஆ சூபள்ளிவாயலில் வைத்து நாவலப்பிட்டி பள்ளி வாயல்கள் சம்மேளன பிரதிநிதிகளிடமும் அவர்கள் ஊடாக பாடசாலைகள் மாணவர்களுக்கும் கையளித்தனர்.

நாவலப்பிட்டியில் உள்ள அல் அஸ்ஹர் பாடசாலை , கதிரேசன் பாடசாலை, ஒக்ஸ்வேட் பாடசாலை மற்றும் அல் சபா பாடசாலைகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களே வழங்கி வைக்கப்பட்டன.

உணவு பொதிகள் மற்றும் தலையணைகள் ஆகியன நாவலப்பிட்டி நிவாரண சேமிப்பு மையத்தில் வழங்கப்பட்டது.

இதற்கான உதவிகளையும், வாகன வசதிகளையும் தனவந்தர்கள; வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகியோருக்கு அக்கரைப்பற்று மக்கள் உதவிக்கரம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)