விபுலாநந்தர் அடிகளாரின் புதிய சிலை திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் புதிய சிலை ஒன்று அவர் பிறந்த மண்ணான கிழக்கிலங்கையின் காரைதீவு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு விபுலாநந்தர் பணி மன்றத்தின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதான வீதியை அண்மித்த கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் அடிகளாரின் மார்பளவிலான இப்புதிய சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு விபுலாநந்தர் ஞாபகர்த்தப் பணிமனையின் தலைவர் வெ.ஜெநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த சிலை திறப்பு நிழ்கவின் போது மட்டக்களப்பு இராமகிருஷ்ன மிசன் உதவிப் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாத வானந்தஜீமகராஜ் திரு முன்னிலை அதிதியாகக் கலந்து கொண்டு, சிலையை அண்மையில் திறந்து வைத்தார்.

சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் நிறுவப்பட்டுள்ள அடிகளாரின் ஐந்தாவது சிலை இதுவாகும்.

அடிகளார் பிறந்த வீடும், அவரது ஞாபகர்த்தமான பணிமன்றமும் காரைதீவில் அமையப்பெற்று, பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவதும் சிறப்பு அம்சமாகும்.

விபுலாநந்தர் அடிகளாரின் புதிய சிலை திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

விபுலாநந்தர் அடிகளாரின் புதிய சிலை திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
விபுலாநந்தர் அடிகளாரின் புதிய சிலை திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
விபுலாநந்தர் அடிகளாரின் புதிய சிலை திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
விபுலாநந்தர் அடிகளாரின் புதிய சிலை திறப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More