
posted 25th August 2022
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின் தேர் உற்சவம் இன்று நடைபெற்றது.
காலை 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று, நல்லூர் கந்தன் காலை 7 மணிக்கு தேரடியை நோக்கிப் புறப்பட்டான். காலை 7.15 மணிக்கு தேர் திருவீதி உலா வந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு 'அலங்காரக் கந்தன்' என்று வர்ணிக்கப்படும் நல்லூர் கந்தனை வழிபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)