
posted 8th August 2022
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் -திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதான குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போனபோது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.
சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 அன்று முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டு பிடிக்கப்படவில்லை.
எனவே, யுவதியை கண்டவர்கள் *0760777615* , *0740961230* என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)