
posted 30th August 2022
சரித்திரப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலய (O.L.R) வருடாந்த திருவிழா 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
கன்னிமரியாளின் பிறந்த தினமான செப்டம்பர் 8 ஆம் திகதி இத்திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. 30 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையும் நவநாட்கள், வழிபாடுகள், சிறப்பு மறையுரைகள் மாலையில் இடம்பெறும்.
7 ஆம் திகதி மாலை நற்கருணை ஆராதனையும் , பவனி ஆசீர்வாதமும் 8 ஆம் திகதி காலை யாழ் ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருநாள் கூட்டுத் திருப்பலியும் அன்னையின் திருச்சொரூப பவனியும், ஆசீரும் நடைபெறும்.
இவ்வாலயத்தின் 95 வது ஆண்டு நினைவு விழாவை அடுத்த ஆண்டு கொண்டாடுவதற்கும் பங்கு மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1928 செப்டம்பர் 8 அன்றைய யாழ் ஆயர்.யோண் ஏ.கியோமோர் ஆண்டகையால் இவ்வாலயம் அபிசேகம் செய்யப்பட்டு வழிபாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. யாழ்.நகரில் இடம்பெற்ற போர் அனர்த்தங்களில் ஆலயம் சேதம் அடைந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)